நீதி கட்சி, திராவிட கட்சிகள் தோன்ற காரமணாக இருந்த அயோத்தி தாசப்பண்டிதர்


                                                       அயோத்தி தாசப்பண்டிதர்
                                                                        1845
                        தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற சமுதாய சீர்திருத்தவாதிகளுக்கு முன்னதாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அறிஞர் ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தனியெரு மனிதனாக நின்று பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கெண்டு எல்லா சமுக சீர்திருத்தவாதிகளுக்கும் முன்னோடியாக இருந்தவர் தான் அயோத்திதாசப்பண்டிதர். அயோதிதாசப்பண்டிதர் 1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் கந்தசாமி. இவர் தனது ஆசிரியரின் பெயரையே தனது பெயராக்கி கெண்டமையால் அவரின் இயற்பெரை அறியமுடியவில்;லை. 

                                    தமிழ்தென்றல் திரு.வி.க வுக்கு முடக்குவாதம் ஏற்பட்டிருந்தது. அதை போக்குவதற்கு சரியான மருத்துவர்கள் அக்காலத்தில் திரு.வி.க.வின் முடக்குவாதாத்தை அயோதி தாசப்பண்டிதர் குணப்படுத்தினார். பின்னாலில் அவர் திரு.வி.க.வின் குடும்ப வைத்தியாராகவே மாறிவிட்டார். தமிழ் மருத்துவ துறையில் மட்டுமின்றி கல்வி அறிவிலும் சிறந்தவராக திகழ்ந்தார் அயோத்தி தாசாப்பண்டிதர்.வெறுப்படைவதை காட்டிலும் விவேகமாக      சிந்திப்புத பயன்தரும்  என்ற கொள்கையுடைய இவர் பிரபந்தங்களையும், திருமுறைகளையும்,விவிலியப் பேருரைகளையும்  நபியின் வழிமுறைகளையும், சமண, பவுத்த நூல்களையும்,தமிழ் இலக்கியங்களையும் படித்துள்ளேன். வாருங்கள் வாதிடுவோம்.என்றும் உயர்சாதிக்காரர்கள் என்றும் இருமாந்தவர்களிடம் அறைக்கூவல் விடுத்தார். இதிலிருந்தே          அவரின்  கல்வித்திறமையையும் அவரின் வாதிடும் திறமையும் விளங்கும்.

                      உரிமையை       அடைய வேண்டுமானால்  ஒற்றுமை வேண்டும்      ஒற்றுமையோடு முன்னேற்றம் கருதி வாழ்ந்தால்     உலக  சீர்திருத்த வாதிகளில் நாமும் உருவராக முடியும் என       அறிவுருத்தியவர் அயோத்திதாசப்பண்டிதர். 1870 ஆம் ஆண்டு  அயோத்திதாசப்பண்டிதர்    பழங்குடி  மக்களை ஒன்றினைப்பதற்காக அத்வைதானந்த சபையை     நிறுவினார். புவுத்தமதத்தை தழுவியவர்கள்          பல         கொடுமைகளுக்கு        ஆளக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களாக        ஒதுக்கிவைக்கப்பட்டார்கள் என்று பல ஆதாரங்களுடன்     எடுத்து கூறினார்.   மேலும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்களை        பூர்வ குடிமக்கள் என்றும்        பூர்வ    தமிழர்கள் என்று அழைக்க வேண்டும் என      வலியுறுத்திய       அயோதி தாசப்பண்டிதர்    1881 ஆம் ஆண்டு         ஆங்கில அரசு மக்கள்    தொகை       கணக்கெடுப்பு     நடத்திய      போது           இவற்றை    கோரிக்கையாக   முன்வைத்தார். 

          1875 ஆம் ஆண்டு முதல்       பகுத்தரிவு     பிரச்சாரத்தை   தனியொரு மனிதாராக செய்து வந்த அயோத்திதாசர்   1885 ஆம் ஆண்டு      ‘திராவிட  பாண்டியன்” எனும்        இதழை       ஜான்ரத்தினம் என்பவரை      ஆசிரியராகக்கொண்டு        நடத்திவந்தார்.     தனது கொள்கைகளை        எடுத்துச்சொல்ல         இந்த        இதழையும்    ‘ஒரு பைசா தமிழன்’ ‘தமிழன்’ ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தினர்     அயோத்திதாசப்பண்டிதர்.   எல்லா சமய கோட்பாடுகளையும்       ஒன்றினைத்து      ‘பிரம்மஞான   சபை’என்ற          நிறுவனம்    பிளவுட்ஸ்கி,      கர்னல்        ஆல்காட்        என்ற      ஆங்கிலேயர்களால்          இங்கிலாந்தில்        நிறுவப்பட்டு       சென்னைக்கு    மாற்றப்பட்டது.    பிளவுட்ஸ்கியும்              ஆல்காட்டும்           சென்னையில்          நிரந்தரமாக                தங்கினர்.   இவர்களது கோட்பாடுகள்     ஏழை   மக்களை  சென்றடையவில்லை.                 ஆனால்           இவர்களை     பயன்படுத்திக  கொண்டார்           அயோத்திதாசப்பண்டிதர்.      

                 கர்னல்     ஆல்காட்       பவுத்த        மதத்தில்       பற்று    கெண்டவர். அவரை கொண்டே  தாழ்த்தப்பட்டவர்களுக்காக பல     கல்வி       நிறுவனங்களை   ஏற்படுத்தினார்.  1886 ஆம் ஆண்டு     ஆல்காட்     உதவியுடன்      தர்க்க    இயலை      தென்னிந்தியா     முழவதம்       பரப்பிய        அயோத்திதாசப்பண்;டிதர்            சைவம், வைணவம்,     அத்வைதம்       முதலிய     கோட்பாடுகளை      நன்கு      அறிந்தவர்.      1900 ஆம் ஆண்டில்       பவுத்த மதத்தில்       சேர்ந்து    இலங்கைக்கு        சென்று    சந்தாh.   ;    அஙடகிருந்து     ஒரு     பவுத்த     துறவியையும்        சென்னை;கு     அழைத்து   வந்து   1902 ல்         தென்னிந்திய      பவுத்த    சாக்கிய      சங்கம்   என்ற அமைப்பை    சென்னை          ராயப்பேட்டையில்         தோற்றுவித்து   டி  அதன்    செயலாளராகப்     பணியாற்றினார்.         பவுத்த மதகோட்பாடுகளே      உண்மை     என்று    கூறிய       இவரை    இந்திய    பவுத்த    மதத்தின்        முதல்    மருமலர்ச்சியாளர்     என    பாராட்டுகின்றனர்.     இவர்     புத்தரை   பற்றி  எழுதிய        பூர்வத்தமிழொளி      1912 ல்      புத்தரது   ஆதிவேதம்     எனும்        நூலாக      வெளிவந்தது.     புத்தர்   பேசிய       பாலி     மொழியில்  மிகச்சிறந்த     புலமை வாய்ந்தவரான       அயோத்தி தாசாப்பண்டிதர் பல நூல்களை         எழுதியுள்ளார்.           ‘விபூதி   ஆராய்ச்சி’,     ‘கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி’இ ‘அரிச்சந்திரன் பொய்கள்’இ ‘திருவள்ளுவர் வரலாறு’ ‘புத்த மாhக்க்வினா-விடை’இ ‘இந்திரத தேசசரித்திரம்’ ‘விசே~ சங்தைத் தெளிவு’இ ‘தென்னிந்திரர் தேசப்புத்தகம் போன்ற நூல்களை     பகுத்தறிவுக்  கண்ணோட்டத்துடன்    எழுதியுள்ளார்.      


திராவிட மக்களை         ஒன்று     சேர்ப்பதற்காகவும்       இம்மக்களின்            குறைகளையும்        கோரிக்கைகளையும்   எடுத்து      கூறுவதற்காக     1890 ஆம் ஆண்டு      திராவிட      மாகாஜன      சபையை        தோற்றுவித்தார்     அயோத்திததாசப்பண்டிதர்.        திராவிட   மகாஜன     சபையின்      முதல்     மாநாடு        1891    ஆம்      ஆண்டு        டிசம்பர்      1    ஆம் தேதி        நீலகிரியில்         நடைபெற்றது.         அதில்    10    தீர்மாணங்களை        நிறைவேற்றி      இந்திய      தேசிய     காங்கிரஸ்க்கு      அனுப்பிவைத்தார்.      தூழ்த்தப்பட்டோரின்    முன்னேற்றத்திற்கான        ஆதரவை     படித்த          சாதி          இந்துக்களில்       இருந்துதான்         பெற    வாய்ப்புண்டு     .  அவர்கள் தான்      பேதமற்ற            நீதியையும்        சாதி  சிநப்பை       கருதாத        சமய         நிற வேற்றுமைகளை      அகற்றியும்       ஆங்கிலேயர்களிடமிருந்து   சலுகைகளை    பெற்றுத்தர     வேண்டும்              என்பன   போன்ற    கோரிக்கைகள்   மக்கள்      முன்        நிறைவேற்றப்பட்டது.   இந்திய   தேசிய     காங்கிரசுக்கு      அனுப்பப்பட்ட    கோரிக்கைகள்        பெற்றுக்கொள்ளப்பட்டதா  என்பது      கூடத்தெரியாமல்      17 ஆண்டுகளாகியும்      பதில் வரவில்லை.   

அயோத்திதாசர்      தனியாக     நின்று      நின்று       போராடியதாலேயே       அவருக்கு    நீதி    கிடைக்க வில்லை. அவரைப்போலவே       இரட்டைமலை   சீனிவாசன்    ,மக்களின்       கோரிக்கைகளுக்காக       தனியாக     போராடினார்.    1914    ஆம் ஆண்டு     தாழ்த்தப்பட்ட மக்களுக்காக      போராடிய      அயோத்திதாசரும்        காலமானார்.      சீரிய    தலைமை       இல்லாதால்     சிதருன்டு போன      மக்களுக்கு     ஆதரவாக      டி.எம்.   நாயர்     தென்னிந்திய      நலஉரிமை       சங்கத்தை    ஏற்ப்படுத்தினார்.     அதன்      வளர்ச்சியே      நீதிக்கட்சியாகவும்    ,திராவிடர் கழகமாகவும்,   பெரியாரின்     சுயமரியாதை     இயக்கம்  ,    திராவிடர்    இயக்கமாக    மாரியது.   புத்தரை   வரதன்   என்று      மக்கள்  கெண்டாடி   வந்தனர்.      அவரை    கொண்டாடிய    இத்தேசத்திற்கு      வட பாரதம்,  தென்பாரதம்              என்று   பெயர்  வந்ததாக   அயோத்திதாசர்    கூரினார்.      அதேபோல்      திருவள்ளுவர்     பிராமண     தந்தைக்கும்      தாழ்த்தப்பட்ட     பெண்ணுக்கும்    பிறந்து     வைசிய    பெண்ணை    மணந்து     மயிலையில்   வாழ்ந்ததாக    கூறப்படுவது  பொய்     என்றும்    அதை    தன்னால்     நிருபிக்க                 முடியும் என்றும்     கூறினார்     அயோத்திதாசப்பண்டிதர்.      



                  

Comments

Popular posts from this blog

வங்காள உரைநடையின் தந்தை வில்லியம்கேரி

ஆதரவற்றோரின் அருமை தந்தை ஜார்ஜ் முல்லர்

பெற்ற மகளை நீ யார் என்று கேட்ட ஜீவா............ 17 வருடங்கள் குடும்பத்தை மறந்து நமக்காக உழைத்த ஜீவானந்தம்