பெற்ற மகளை நீ யார் என்று கேட்ட ஜீவா............ 17 வருடங்கள் குடும்பத்தை மறந்து நமக்காக உழைத்த ஜீவானந்தம்
ஜீவா
21-08-1907
கன்னியாகுமரி மாவட்டம் பூதாப்பாண்டி எனும் கிராமத்தில் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி பட்டம்பிள்ளை உமையம்மை தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ஜீவா. இவரது இயற்பெயர் சொரிமுத்து. இது அவரது குலதெய்வத்தின் பெயர். ஜீவாவிற்கு மூக்குத்தி என்றும் மூக்காண்டி என்ற பெயர்களையும் அவரது பெற்றோர் அவருக்கு சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அவர் இவர் தனது பெயரை ஜீவானந்தம் என்றும், உயிரின்பன் என்றும் மாற்றிக்கொண்டார். இவர் மீதிருந்த அன்பால் மக்கள் இவரை ஜீவா என்றே அழைத்தனர். ஜீவா இயல்பாகவே அனைவரிடமும் அன்புடன் பழகும் குணமுடையவர். கொட்டும் தேளைக் கண்டாலும் கொள்ளாமமல் அதை அப்புறப்படுத்துபவர் ஜீவானந்தம் அவர்கள். ஆனால் நெஞ்சுரமும், நேர்டையும், நாவன்மையும், கொண்டவர். தீண்டாமை, சாதி, மூடப்பழக்கவழக்கங்களை கடுமையாக எதிர்தவர் ஜீவானந்தம் அவர்கள். சமதர்மத்திற்காக இளம் ;வயதிலேயே தன்னை அர்ப்பணித்து கொண்ட தியாகியான இவர் நாச்சியார்புரம் எனும் ஊரில் 'உண்மை விளக்க நிலையம்" ஒன்றையும் காந்தி ஆசிரமம் ஒன்றையுயும் தொடங்கினார் ஜீவானந்தம்.
இளம் வயதிலேயே தேசத் தொண்டிற்கு காந்தியடிகளையும், சமுக தொண்டிற்கு பெரியாரையும் வழிகாட்டியாக கொண்ட ஜீவா, அந்நியர் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்து பல முறை சிறை சென்றுள்ளார். பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்லும் முன் எழுதிய கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து 'நான் ஏன் நாத்திகனானேன்" எனும் தலைப்பில் வெளியிட்டார். அதற்காக ஜீவானந்தம் கைது செய்யப்பட்டார். தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காத ஜீவா பெரியார் ஜஸ்டிஸ் கட்சியேடு தொடர்பு கொண்டதை எதிர்த்தார். சுயமரியாதை சமதர்மக்கட்சியை நிறுவியதோடு 'சமதர்மம்" என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் பல நடத்திய ஜீவா ஒருமுறை தடையை மீறி ஊர்வலமாக சென்ற போது சுடுவோம் என்று துப்பாக்கியை நீட்டிய போலீசாரிடம் சுடு என்று மார்பை நிமித்தி காட்டியவர் ஜீவானந்தம்; அவர்கள்.
மனிதர்களின் மேன்மையடைந்த வாழ்க்கைக்கு சமுக சீர்திருத்தம் மட்டுமே போதாது என்றும் சமுக பொருளாதார அமைப்பையே மாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் கம்யூனிஸ்டாக மாறினார் ஜீவா. ஜீவா மிகச்சிறந்த தமிழறிஞர். தாமரை என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார். நச்சு மற்றும் நசிவு இலக்கியங்களை எழுதும் போலிகளின் முகத்திரையைத் ' தாமரை" இதல் மூலமாக கிழித்துப்போட்டவர் ஜீவானந்தம் அவர்கள். பல அரிய கட்டுரைகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். ஏங்கல்ஸ் எழுதிய கற்பனா சே~லிசமும், விங்ஞான சோ~லிசமும் என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார். எளிமையாகவும்,தெளிவாகவும், இவர் மொழிபெயர்த்த நூல்களால்தான் மாக்ஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்கள் பாமர தமிழருககும் அதிகமாக தெரிய வந்தார்கள் என்றால் அது மிகையில்லை.
ஜீவா மிகவும் எளிமையானவர். ஒருமுறை அணிந்த துணியையே மறுமுறையும் துவைத்துக்கட்டும் அளவுக்கு மாற்றுதுணி இல்லாத நிலையில் ஏழ்மையாகவும், எளிமையாகவும் பொத்தல் குடிசையில் வாழ்ந்தவர். கதராடை கிடைக்கவில்லை என்பதற்காகத் தனது தாய்க்கு ஈமச்சடங்கு செய்ய மறுத்தவர் ஜீவானந்தம் அவர்கள். ததான் பெற்ற மகளையே அடையாளம் தெரியாமல் நீ யார் என்று கேட்டு அவர் மூலமாகவே தனது மகள் என்பதை அறிந்து வருந்தியவர். சுமார் 17 வருடங்களாக தனது மனைவி மகளைகூhட பார்காமல் சமுதாயத்திற்காக உழைத்துக்களைத்த தியாகி ஜீவானந்தம். அவர் பெருந்தலைவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பராவர். ஜீவா சட்டமன்ற உருப்பினராக இருந்த போதும் இவரது நண்பரான காமராஜர் முதலமைச்சராக இருந்த போதும் தங்களுக்குள்ள நட்பு பதவி செல்வாக்குகளை பயன்படுத்தி சொகுசாக வாழதாமல் கட்டிய துணியுடனும் ஒட்டிய வயிருடனும் மக்களுக்காக வாழ்நதவார் ஜீவா. அதனால் தான் இவரை மாசற்ற பொதுஜன ஊழியர் என்று காமராசரும், தமிழக் கலையின் முழுவடிவ தலைவன் ஜீவா என பட்டுக்கோட்டையாரும் 'துன்பச்சுமைதாங்கி, மன்புச்சுமைதாங்கும் ஆண்" என்று பாரதிதாசனாலும் போற்றும் பெருமைக்குறியவராக விளங்கினார் ஜீவானந்தம்.
மக்களுக்காக வாழ்ந்த ஜீவாவுக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் நாள் மாரடைப்பு ஏற்ப்பட்டது. அதிகாலை மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவானந்தம். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 18 ஆம் Nதி ஜீவானந்தம் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். அவர் பேசிய கடைசி வார்ததையான 'காமராசருக்க போன் பண்னு" என்று கூறி உயிரை விட்ட ஜீவாவிற்கு காமராஜர் தலைமையில் 1966 ஆம் ஆண்டு சிலை திறக்கப்பட்டது. தமிழக அரசும் ஜீவா பெயரில் போக்குவரத்து கழகம் அமைத்தது. இருந்த போதும் தமிழக மக்களும் தமிழக அரசும் ஜீவா போன்ற அறிஞர்களுக்கு செய்த கைமாறு மிகவும் குறைவேயாகும்.
Comments
Post a Comment