ஆதரவற்றோரின் அருமை தந்தை ஜார்ஜ் முல்லர்
ஆதரவற்றோரின் அருமை தந்தை
ஜார்ஜ் முல்லர்
(27-09-1805)
அனாதையரின் அருமைத் தந்தை என்று புகழப்படுபவர் ஜார்ஜ் முல்லர். இவர் 1805 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் பிரஸ்ஸியா என்ற நாட்டில் குரோப்பன் ஸ்டாட் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றியவர். பள்ளியில் படித்த இளம் பருவத்திலேயே தீய பழக்க வழக்கங்களோடு வளர்ந்த ஜார்ஜ் முல்லர் தனது தந்தையிடமிருந்து பணத்தை திருடுவதும், வயதுக்கு மீறீய ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய 16 ஆம் வயதில் இவரது தாயார் இறந்தார். அன்று இரவும் கூட குடிப்பதிலும், சீட்டாடுவதிலும் காலத்தை கழித்தார் முல்லர். 1822 ஆம் ஆண்டு நார்தூசன் எனும் பள்ளியில் சேர்ந்து இலக்கியம், சரித்திரம் போன்றவற்றை கற்றார்.
தனது 20 ஆம் வயதில் யோல் பல்கலைகழகத்தில் சேர்ந்தார் ஜார்ஜ் முல்லர். அப்போதும் அவர் திருடுவதையும், ஏமாற்றுவதையும் கைவிடவில்லை. 1825 ஆம் ஆண்டு தனது நண்பர்களின் மூலம் இயேசு கிருஸ்துவின் போதனைகளையும்,சேவைகளையும் கேள்விப்பட்டு மனம் மாறினார் ஜார்ஜ் முல்லர். அதன் பிறகு வெளிநாடுகளுக்கு சென்று கிருஸ்துவின் போதனைகளை பரப்ப வேண்டும் என தீர்மானித்தார். பிரஸ்ஸியாவின் ஒவ்வெரு குடிமகனும் பல்கலைக்கழக தேர்வுக்கு பின்னர் கண்டிப்பாக மூன்றாண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஜார்ஜ் முல்லருக்கு ஏற்பட்ட திடீர் நோயின் காரணத்தால் அவர் ராணுவ பயிற்சிக்கு தகுதியற்றவர் என கூறி நீக்கப்பட்டார்.
1829 ஆம் ஆண்டு பிரஸ்ஸியாவிலிருந்து இங்கிலாந்து வந்து சேர்ந்தார். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து மி~னரிகளை அனுப்பி வந்;தது. ஆனால் இங்குள்ள அனாதை பிள்ளைகள் கவனிப்பாரற்று இருப்பதை உணர்ந்த ஜார்ஜ் முல்லர் ஆதரவற்ற அனாதைகளுக்கு உதவ வேண்டும் என தீர்மானித்தார். ஆகஸ்ட் எச் பிராங் என்ற புகழ்பெற்ற ஆதரவற்றோர் காப்பாளரின் வாழ்க்கை வரலாற்றை படித்த முல்லர் அவரை போலவே ஆதரவற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்தார். வீதிகளில் திரியும் ஆதரவற்ற சிறுவர்களை காலை 8 மணிக்கெல்லாம் ஒன்று சேர்த்து அவர்கள் அனைவருக்கும் உணவளித்து வந்தார். விரைவிலேயே அனாதைகளுக்கான விடுதி ஒன்றையும் ஆரம்பித்தார் ஜார்ஜ்முல்லர்.
1834 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி உள்நாட்டு வெளிநாட்டு வேத நிறுவனம் எனும் அமைப்பை நிறுவிப் பள்ளிகள்,முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை ஆரம்பித்தார். இவரது ஆதரவற்றோர் விடுதிகளுக்கு ஏராளாமானோர் பண உதவிகளை வழங்கினர். வாரத்திற்கு ஒருமுறை ஒரு டாலர் சம்பளம் பெரும் மூதாட்டி ஒருவர் ஐநூரு டாலர்களை நண்கொடையாக கொடுத்துவிட்டு இதற்கு மேலும் கொடுக்க தன்னிடம் பணம் இல்லையே என கண் கலங்கினாராம.; இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஜார்ஜ் முல்லரின் சேவைக்கு வரவேற்பிருந்தது. சுமார் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அனாதை பிள்ளைகளுக்கு காப்பகமும் தொழிற்பயிற்சி கூடமும் அமைத்து தந்தார் ஜார்ஜ்முலலர். உலகம் முழுவதும் உள்ள அனாதை பிள்ளைகளுக்கௌ;ளாம் உதவ வேண்டம் என்ற எண்ணம் ஜார்ஜ் முல்லரின் உள்ளத்தில் எழுந்தது. அமெரிக்கா, கனடா, எகிப்து,வட ஆப்பிரிக்கா,தென்ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயனம் மேற்கெண்ட ஜார்ஜ் முல்லர் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது பற்றி வேண்டுகோள் விடுத்தார். உலக நாடுகளில் உள்ள பல ஆதரவற்றோர் விடுதிகளுக்கு பண உதவிகளை வழங்கினார் முல்லர்.
ஜார்ஜ் முல்லர் மிகவும் சிக்கனவாதியாக வாழ்ந்தவர் இருப்பினும் ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் வாரி வழங்குவதில் தவறியதே இல்லை முல்லர். அவரது சேவையை பாராட்டி பலர் தங்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை முல்லரின் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு எழுதி வைத்தனர். ஜார்ஜ் முல்லருக்கு வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலகுறைவின் காரணமாக தான் ஆதரவற்றோருக்காக சம்பாதித்த லட்சக்கணக்கான டாலர் பெருமானமுள்ள சொத்துக்களை தனது மருமகன் ஜேம்ஸ்ரைட் என்பவரிடம் ஒப்படைத்து பணியை தொடர்ந்து நடத்தும்படி கேட்டுக்கெண்டார். 1837 ஆம் ஆண்டு ஜார்ஜ் முல்லருக்கு வயிற்றுக்கோளாறு, தலைசுற்றல் போன்ற உடல் உபாதைகளால் அவதியுற்று வந்தவர் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி காலமானார்.
தீவிர இறைபற்று கொண்ட ஜார்ஜ் முல்லர் தனது வாழ்வில் சுமார்200 முறைக்கு மேல் பைபிளைப் படித்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் நூறு முறைகள் முலங்காளில் நின்றபடியே ஜார்ஜ் முல்லர் பைபிளை படித்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது.
Comments
Post a Comment