வங்காள உரைநடையின் தந்தை வில்லியம்கேரி
சுவிஷச மெஷினரி சங்கத்தை 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியவர்
வில்லியம்கேரி
17-08-1796
நம் நாட்டிற்கு வந்த பெரும்பாலான அந்நிய நாட்டினர் நம் நாட்டை கொள்ளையடித்து சென்றனர். அதில் ஒரு சிலரே நம் நாட்டு மக்களுக்காக உடல் உழைப்பு அனைத்தையும் தியாகம் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் வில்லியம்கேரி. இவர் இங்கிலாந்து நாட்டின் நார்த்தாம்டன்சியர் மாவட்டத்திலுள்ள பர்லஸ்பரி எனும் கிராமத்தில் 1761 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ஏhழ்மையான குடும்பத்தில் பிறந்தார். வில்லியம் கேரியின் தந்தை நெசவாளராக இருந்து பின் நாட்களில் பள்ளி ஆசிhரியராக பணிபுரிந்தார். வில்லியம் கேரி தனது 28 வயது வரை செருப்பு தைக்கும் தொழில் செய்து தனது குடுபத்திற்கு மிகவும் உதவியாக இருந்து வந்தார்.அவர் தைக்கும் செருப்புகளை சுமார் 9 மைலுக்கு அப்பால் இருக்கும் தனது முதலாளியிம் கொடுப்பதற்கு நடந்தே செல்வார். முதலாளியின் ஏச்சு, கொடுமைகளை பொருமையுடன் தாங்கிக்ககொள்வார்வா வில்லியம்கேரி.
வில்லியம் கேரி சிறு வயது முதலே விடாமுயற்சி உடையவர். தனது 14 வது வயதிலேயே சரித்திரம்,அறிவியல், பயண நூல்கள் பலவற்றையும் கற்று அதில் நிபுணத்துவம் பெற்றார். தெரிந்தவர்கள் யாராவது புத்தகங்கள் வைத்திருந்தால் அவர்களிடம் கெஞ்சி அடம்பிடித்து புத்தகங்களை வாங்கிச்சென்று படிப்பார். பல்வேறு புத்தகங்களையும் படித்த வில்லியம் கேரி லத்தின், கிரேக்கம், பிரஞ்சு, எபிரேயம், டச்சு, உள்ளிட்ட மொழிகளை தானே கற்று தேர்ந்தார். மேலும் தன்னோடு பணிபுரிந்த நண்பர்கள் மூலம் கிருஸ்த்தவ மார்கத்தின் சீர்திருத்த சபைகளை பற்றி அறிந்து அதிலும் ஈடுபட்டார். வில்லியம் கேரி நூல்கள் பலவற்றை படித்தும் இவரது செருப்புக்கடையை தேடி வரும் அறிஞர்கள் பலரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் வில்லியம் கேரி தனது அறிவை வளர்த்துக்கெண்டார்.
வில்லியம் கேரி தன்னைவிட ஐந்து வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது செருப்புக்கடையை பிடிங்டன் நகருக்கு மாற்றினார். அதோடு மட்டுமில்லாமல் 'ஓல்நே" என்ற திருச்சபையில் உருப்பினரான பின்னர் ஊழியர் பயிற்சி பெற்று 1786 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 நாள் பாப்டிஸ்ட் திருச்சபையின் குருவாக முழுப்பட்டம் பெற்றார். அப்போதும் செருப்பு தைக்கும் தொழில் செய்தே பிழைப்பு நடத்தினார் வில்லியம்கேரி. இயேசு கிருஸ்துவின் அன்பு, இரக்கம், மன்னிப்பு பேன்ற நற்போதனைகளை உலக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே வில்லியம்கேரி உலக உருண்டையின் படம் ஒன்றையும் உருவாக்கினார். ஒவ்வெரு நாட்டின் தகவல்களை சேகரித்து அவர் உருவாக்கிய உலக உருண்டையில் ஒட்டி வைத்தார். இவ்வாறு படித்தும் விசாரித்தும் தெரிந்து கெண்ட தகவல்களை கெண்டு வில்லியம்கேரி 'விசாரணை" எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
வில்லியம்கேரியின் வேண்டுகோளுக்கிணங்கி 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு விதவையின் வீட்டில் சுவிN~ச மி~னெரி சங்கம் தேற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத்திற்கு முதல் காணிக்கையாக அந்திரேயா புல்லர் என்பவர் அழகிய மூக்குபொடி டப்பாவை வழங்கினார். இந்தியாவில் வங்க தேசத்து மக்களின் துயர வாழ்க்கையை கேள்விப்பட டாக்டர் ஜான்தாமஸ் என்பவருடன் 1793 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் மி~னெரிகளாக நியமிக்கப்பட்டு, 1793 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தனது குடும்பத்துடன் கல்கத்தா வந்திறங்கினார் வில்லியம்கோரி. புதிய இடத்தில் எந்த வேளையும் இல்லாமல் வருமையில் வாடிய வில்லியம் கேரி, சுந்தரவனக் காடுகளின் நடுவே சில ஏக்கர் நிலங்களை பிடித்து அதில் குடில் அமைத்து வனவிலங்குகளுக்கிடையே வாழ்க்கையை தொடங்கினார் வில்லியம்கேரி.
1794 ஆம் ஆண்டு அவுரி எனும் தொழிற்சாலையில் நிர்வாக பொறுப்பை ஏற்றார் வில்லியம்கேரி. அந்த சமயத்தில் அவரது மகன் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சாதி வேற்றுமையால,; இறந்த தனது மகனின் உடலை புதைக்க முடியாமல் திண்டாடினார் வில்லியம்கேரி. மகன் இறந்த சோகத்தில் கேரியின் மனைவிக்கு மூளை கோளாறு அதிகமானது. வில்லியம் கேரியும் நோயால் பாதிக்கப்பட்டார். அவுரி தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த மக்களிடம் இயோசுவை பற்றி போதித்தார். ஆதரவற்ற மக்களுக்கு வேலை வழங்கினார் வில்லியம்கேரி. வங்க மக்களிடம் பேசுவதற்காக வங்க மொழியை கற்ற வில்லியம்கேரி சமஸ்கிருதத்தையும் கற்றுதேர்ந்தார். மேலும் வில்லியம் கேரி வங்க மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்தார். இதுவே வங்க மொழியில் வெளிவந்த முதல் உரைநடை நூளாகும். மேலும் வில்லியம் கேரிதான் முதன் முதலாக வங்க மொழியில் அகராதியை வெளியிட்டார். சமஸ்கிருதத்தில் ஓர் இலக்கண நூளையும் அகராதியையும் எழுதினார். இதனாலோயே வில்லியம் கேரி வங்காள உரைநடையின் தந்தை என பேற்றப்படுகிறார்.
அவுரி தொழிற்சாலை மூடப்பட்ட பிறகும் வருமையில் வாடிய வில்லியம் கேரி தனது நண்பருடன் சொராம்பூர் எனுமிடத்தில் அவருடைய சில மி~னெரிகளை இணைத்து கிருஸ்தவ ஊழியம் செய்து வந்தார். பிற்காலத்தில் செராம்பூரில் ஒரு கல்லுரியையும் அச்சகத்தையும் நிறுவினார். செராம்பூரில் இலவச பாடசலை ஆரம்ப கல்வி நிலையம்,பள்ளி விடுதிகள் போன்றவறையும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அப்பேததைய காலகட்டத்தில் பெண்களுக்கென்று பள்ளிக்கூடங்களையும் விடுதிகளையும் ஏற்படுத்தினார் வில்லியம் கேரி. அவரது கல்விக்கூடங்களில் மாணவ மாணவிகளுக்கு பல மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டது. 1801 ஆம் ஆண்டு வில்லியம் கோட்டை பாடசாலை கல்லூரியாக்கப்பட்டபோது வங்காளம், சமஸ்கிருதம், மராத்தி, கற்பிக்கும் பேராசிரியராக நியமமிக்கப்பட்டார் வில்லியம் கேரி. வருடத்திற்கு 1500 பவுன் சம்பளம்,செருப்புதைத்த அவனுக்கு இவ்வளவு பெரிய பதவியா....? என தன்னை தானே வியந்தார் வில்லியம் கேரி. பின்னர் படிப்படியாக உயர்ந்து செராம்பூர் பல்கலைக்கழகத்தின் அமைப்பாளராகவும்,நிறுவனராகவும்,இயக்குனர், முதல்வர் என 24 ஆண்டுகள் பல்வேறு பதவிகளை வகித்தார் வில்லிரியம் கேரி.
வங்காளத்தில் குழந்தை திருமணம், உடன்கட்டைஏறுதல் போன்றவற்றை ஒழிக்கச் சமுதாய சீர்திருத்த இயக்கங்களை ஆரம்பித்தார் வில்லியம் கேரி. உடன்கட்டை ஏறுதல் இந்து சாஸ்த்திரங்களில் இல்லை என்றும் அதனை தடைசெய்ய வேண்டுமென ஆங்கில அரசை கட்டாயப்படுத்தியதோடு மட்டுமின்றி சாதி ஒழிப்பு சட்டத்தை மொழிபெயர்த்து அரசுக்கு அளித்தார். சில உயர் இந்துக்களின் இடையூறால் 24 ஆண்டகளுக்கு பிறகே இது சாத்தியமானது. உடன்கடடை ஏறுதல் விதவை மறுமணம் போன்ற முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியதில் வில்லியம் கேரி ராஜாராம் மோகன் ராய்க்கு முன்னோடியாக திகழ்ந்தார். கு~;டரோகிகளை உயிருடன் எரித்தல், முதியேரை கங்கை நீரில் வீசிக்கெல்லுதல், திருவிழாவில் தேர் சக்கரங்களில் விழுந்து இறப்பது போன்ற செயல்களை தடுக்க வழிவகை செய்ததோடு கல்கத்தாவில் கு~;டரோக நிவாரண விடுதி ஒன்றும் நிருவினார் வில்லியம் கேரி. விவசாயத்தை ஊக்குவித்த கேரி இந்திய மக்கள் பசியின்றி வாழாவேண்டும் என்பதற்காகப் புதிய வகை தாவரங்கள்,நவீனக்கருவிகள், மற்றும் விவசாயத்தில் பல்வேறு நுட்பங்களை கொண்டுவந்தவர் கேரி இதனாலேயே கல்கத்தா தாவரவியல் பூங்காவில் வில்லியம் கேரியின் பளிங்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரின் விவசாய ஆர்வத்தை கேள்வியுற்ற அரசாங்கம் 1820 ல் இவரை விவசாய அபிவிருத்தி கழகத்தின் செயலாளராக நியமித்தது.
Comments
Post a Comment