தமிழகத்தில் முதல் முறையாக....... கலப்பு திருமணம் செய்த குத்தூசி குருசாமி........
குத்தூசி குரசாமி
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்கங்களையும் சாதிக் கொடுமைகளையும் ஒழிக்க முற்பட்டபோது அவருடன் லட்சக்கணக்கானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அத்தகைய சிறந்த மனிதர்களுள் முதன்மையானவர் குத்தூசிகுருசாமி. இவர் குருவிக்கரம்பை எனும் ஊரில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி சாமிநாதன், குப்பு அமையார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளம் வயதில் பக்திமானாகவும் அறிவுக்கூர்மை மிக்கவராகவும் திகழ்ந்த குருசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன் மனதை பறிகொடுத்து பெரியாரின் தீவிர தொண்டர் ஆனார்.
1927 ஆம் ஆண்டு 1927 அம் ஆண்டு ஈரோட்டில் தந்தை பெரியாரை சந்தித்தார் குருசாமி. பின்னர் 'குடியரசு" பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவது மட்டுமின்றி சிரிக்கும் வகையிலும் சிந்திக்கும் வகையிலும் பேசிப்பழகும் பண்புடையவர்.பெரியாரை யார் விமர்சித்தாலும் அவர்கள் பாணியிலேயே பதிலடியாக எழுதும் குருசாமி விடுதலை பத்திரிக்கையில் 'பலசரக்கு மூட்டை" எனும் பகுதியல் குத்தூசி என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவை. குத்தூசி என்ற ஒருவரின் போச்சு எழுத்து இல்லை என்றால் சுயமரியாதை இயக்கம் வளர்ந்திருக்க வாய்பே இல்லை என தந்தை பெரியார்,ராமநாதன்,கே.டி.கே தங்கமணி,ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
ஜகம் எதிர்த்த போதிலும் தனித்தெதிர்க்கும் சுயமரியாதை சுடர் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாhராட்டப்பட்டவர் குத்தூசி குருசாமி. இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து அத்தையரின் ஆதரவில் வளர்ந்த போதும் மனம் தளராமல் தன் சகோதரிகளை படிக்கவைத்ததோடு,தானும் படித்து முன்னுக்கு வந்தவர் குருசாமி. சாதிவெறி தலைவிரித்தாடிய அந்த காலத்திலேயே துணிச்சலுடன் கலப்பு திருமணம் செய்து கெண்டார். இவரது துணைவியார் குஞ்சிதம் அம்மையார் தனது கணவரோடிணைந்து சமுதாய எழுச்சிக்கு உழைத்தார். திருமண வாழ்த்துக்களில் வீணையும் நாதமும் போல என்று வாழ்த்துவது போல குஞ்சிதமும் குருசாமியும் போல என வாழ்த்துவது வழக்கமாக இருந்தது. இணைபிரியாத இவர்களை குஞ்சிதம் குருசாமி என்றே மக்கள் அழைத்து வந்தனர். சாதி ஒழப்பிற்கு கலப்பு திருமணம் ஒன்றேதான் வழி என்று முழங்கியவர் குத்தூசி குருவாமி. திராவிடர் கழகத்திற் தீவிராமாக உழைத்த பெண்மணிகளில் குஞ்சிதம் அம்மையாரும் ஒருவர்.
ஆடம்பர பொருட்களை தவிர்த்து கிழிந்த ஆடையை தைத்து உடுத்திக்கொண்டு சமுதாயப்பணியில் ஈடுபட்டவர் குஞ்சிதம் அம்மையார். பாரதிதாசனின் அனைத்து கவிதைகளையும் ஒருங்கினைத்து ' பாரதிதாசன் கவிதைகள் " என்ற பெயரில் முதன் முதலாக தொகுத்து பெரிய நூலாக வெளியிட்டவர் இவரே. 1933 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கி திராவிடர்களுக்காக குரல் எழுப்பியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணியில் சேர்க்ககப்பட்டு முதல் பெண் கல்வி அதிகாரியாக பதவி ஏற்றார். குத்தூசி குருசாமி அவர்கள் ரிவோல்டு, குடியரசு, புதுமை முரசு,விடுதலை உள்ளிட்ட பத்திரிக்கைகளின் ஆசிரியராக பணியாற்றினார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியேரின் வாழ்வாதாரமும்,சமுதாய நிலையும் உயர வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்ததோடு அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் 'குத்தூசி" பாணியில் கட்டுரைகள் எழுதினார்.
காந்தியடிகளின் மரணம் குறித்த குத்தூசியாரின் கட்டுரை ஒன்றின் காரணமாக வடுதலை பத்திரிக்கையின் மீது வழக்கு தொடரப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கேட்கப்பட்ட பிணைத்தொகைக்கும் மேலாக மக்களே கொடுத்து விடுதலை பத்திரிக்கையை ஆதரித்தனர். 1939 ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டு ஜீவானந்தம்,மணலிகந்தசாமி போன்றோரின் தலைக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர் குருசாமி.
ராஜாஜியின் குலக்கல்வி முறையை எதிர்த்து தீவிரமாக எழுதியும் பேசியும் வந்ததோடு தனது நண்பர் காமராஜரையும் வற்புறுத்தி முதலமை;ச்சர் பொறுப்பை ஏற்கும்படி தூண்டியவர் குத்தூசிகுருவாமி. பெரியாரிடமிருந்து அண்ணா முதலானோர் வெளியோரிய பிறகும் திராவிடர் கழகத்திலேயே இருந்தார் குருசாமி. 1957-1958 ஆம் ஆண்டுகளில் குத்தூசியார் சிறையில் இருந்தபோது திருச்சி கோர்ட்டில் பெரியாருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில் சிறையில் இருந்த கழகத்தவர்கள் தாடி வளர்பதென முடிவெடுத்தனர். குத்தூசியாரும் தாடிவளர்த்தார். அப்போது மன்னார்குடியில் நடைபெற்ற மாநாட்டில் மிக நீளமான தாடியுடன் பங்கேற்றார் குத்தூசியார். இதனை கண்ட கூட்டத்தினர் பெரியாருக்கு போட்டியாக குத்தூசியார் தாடி வளர்திருப்பதாக பேசிக்கெண்டார்களாம்.
குத்தூசியார் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேரி சுயமரியாதை இயக்கம் என்ற புதிதாக தனி இயக்கம் ஒன்றை வேதாசலனார் தலைமையில் 1963 ஆம் ஆண்டு குத்தூசியார் தொடங்கினார். அதன் பொதுச்செயலாளராக குத்தூசியார் இருந்தார். 1962 ல் 'குத்தூசி" என்ற இலக்கிய மாத இதழை தொடங்கி நடத்தி வந்த குருவாமி அவர்கள் சுயமரியாதை இயக்க கொள்கைகளை விளக்க, அறிவுப்பாதை என்ற வார இதழையும் தொடங்கி நடத்தினார். சுயமரியாதை கொள்கைக்காகவே வாழ்ந்த குத்தூசியார் 1965 ஆம் ஆண்ட அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 'தமிழகத்தில் முதல் முறையாக சுயமரியாதை திருமணம் செய்து கலப்பு திருமணத்திற்கு வழிகாட்டிய பகுத்தறிவு சுடரொளி குத்தூசி குருசாமி" என்ற தலைப்பில் முரசொலியின் ஞாயிறுமலர் 'புதையல்" 30-09-1990 7-10-1990 ஆகிய தேதிகளில் குத்தூசி குருசாமி பற்றிய விவரங்களை வெளியிட்டுச் சிறப்பித்தது. குத்தூசியாரின் எழுத்து சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர் நடைமுறைபடுத்தினார். குத்தூசி குருசாமி அவர்கள் பற்றிய விரிவான நூலைக் குருவிக்கரம்பை வேலு அவர்கள் எழுதியுள்ளார்.
Comments
Post a Comment