ஜெயலலிதா சில குறிப்புகள்..............


தங்க தாரகை ஜெயா ஜி 

         1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். மைசூர் மகராஜாவின் குடும்ப மருத்துவராக ரங்காச்சாரியின் மகன் ஜெயராம் தான் இவரது தந்தை. தாயார் நடிகை சந்தியா. திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில்வாழ்ந்த ரங்கசாமி ஐயங்கார்,ஜெயலலிதாவின் தாய்வழி தாத்தா. இவர்களது குடும்பம் வேலையின் காரணமாக ஆந்திராவிலும் பின்னர் பெங்களுரிலும் குடியேரினர்.

   ஜெயலலிதாவிற்கு ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணனும் உண்டு. ஜெயலலிதாவிற்கு 1 வயது ஆனபோது தகப்பனார் காலமாகிவிடவே, ஜெயலலிதா ஒரே இடத்தில் தங்கி படிக்க முடியாமல் சென்னை பெங்களுரு என இரண்டு இடங்களிலும் மாறி மாறி படிக்கும் சூழ்நிலை உருவானது.  முதலில் பெங்களுரு பிஷப் கார்டண் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் உள்ள சர்ச் பார்க்  கான்வென்ட்டில் தனது படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல்மாணவியாhக திகழ்ந்தார். தனது 10 வயது முதல் 16 வயது வரை 6 வருடங்கள் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் படித்து மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சிபெற்றார். 


       படிப்பில் மட்டுமின்றி கலைத்துறையிலும் ஜெயலலிதா சிறுவயது முதலே; முறைப்படி பரதநாட்டியம் பயின்றார். தனது 12வது வயதில் அரங்கேற்றமும் செய்தார் ஜெயலலிதா. பிரபல வித்துவானகளிடம் முறைப்படி கர்நாடக சங்கிதத்தை கற்றுக்கெண்ட ஜெயலலிதா இசைக்கருவிகளை மீட்டவும் இனிமையாகப்பாடவும் தெர்ச்சி பெற்றார். 1964 ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரலமாக பேசக்கற்றுக்கெண்டார். ஜெயலலிதா தனது மேற்ப்பிற்காக முயற்சிக்கும் போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்ப்பட்டு, சினிமா உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி வித்தியாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் சந்தியாவும் சினிமாவில் நடிக்கத்தெடங்கினார். 

ஜெயலலிதாவின் சினிமா உலக வாழ்க்கை :

ஜெயலலிதாவிந்கு சினிமாவில் நடிப்பதற்க்கு விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப நிலை காரணமாக திரை  உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்தாலும்  ஜெயலலிதா 1965 ல் கதாநாயதியாக நடித்தப்படம் இயக்குன் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான 'வெண்ணிற ஆடை" இப்படம் தான் அவரது முதல் தமிழ் படம். அந்த படத்தயாரிப்பின் போதே பி.ஆர். பந்தலுவின் 'ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2படங்களும் 100 ஓடி வெற்றி பெற்றன.

அதே போல் சிவாஜிகணேசன்,என்.டி.ராமாராவ்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,சேபன்பாபு,கிருஷ்ணா பேன்ற முன்னனி கதாநாயகர்களுடனும் நடித்தார். தமிழ்,ஆங்கிலம், தெலுங்கு,கன்னடம்,இந்தி,மலையாளம்,ஆங்கலம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

'வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தாயாரித்த 'எபிசில்" என்ற ஆங்கில படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ் என வேடிக்கையாக குறிப்பிட்டனர்.

முதல் படத்திலேயே கதாநாயகிளாக நடித்து புகழ் ஏணியின் உச்சத்திற்கு சென்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் 100வது படமான திருமாங்கள்யம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு நடிப்பதை குறைத்துக்கெண்டார். அதன் பிறகு 1980 ல் 'நதியை தேடிவந்த கடல்" திரைப்படம் தான் ஜெயலலிதா நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம். சுமார் 120 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971 ஆம் ஆண்டு காலமாணார்.
தனது தாயாரின் நினைவான பேயஸ் தேட்டத்திலட வீடு ஒன்றை கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு வேதா நிலையம் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் "வேதா' என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை : 

சினிமா உலக வாழ்கையிலிருந்து விலகிய ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு ஆ.தி.மு.க உறுப்பினராக சேர்ந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதே ஆண்டில் கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தி வைத்து அ.தி.மு.க.வின் கௌ;கை பரப்பு செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை 1984 ல் ராஜ்ஜிய சபா உறுப்பினராக்கி பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். இதனையடுத்து ஜெயலலித்தாவை பாராளுமன்ற அ.தி.மு.க துணைத் தலைவராகவும் ஆக்கினார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்ததையடுத்த தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்...? என்ற கௌ;வி எழ அ.தி.மு.க வில் பதிவிச்சன்டை உருவானது.ஜெயலலிதா கோஷ்ட்டி, ஆர்.எம் வீரப்பன் கோஷ்ட்டி என கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. முடிவில் எம்.ஜி.ஆhரின் மனைவி ஜானகி தமிழக்தின் முதலமைச்சசரானார். இதன் காரணமாக சட்டசபை கூடியதும் அங்கு பெரும் ரகளை ஏற்ப்பட்டது. 24 நாட்கலே ஆட்;சியில் இருந்த ஜனகி தலைமையிலான அமைச்சரவை 1988 ஜனவரி 28 ஆம் தேதி களைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. 

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. கருணாநிதி தலைமையில் தி.மு.க அமைச்சரவை பொறுப்பேற்றது. அத்தேர்தலில் பிளவுப்பட்ட அ.தி.மு.க ஜெயலலிதா அணி, ஜானகி அணி என தனித்தனியாக போட்டியிட்டு தோற்றனர். இந்த தேர்தலுக்கு பின் ஜானகி அணியில் இருந்த பலர் ஜெயலலிதா அணிக்கு திரும்பினர். அந்த அணிக்கு இரடடை இலை சின்னம்இ தலைமைநிலைய கட்டிடம் ஆதியவை கிடைத்தது. ஜெயலலிதா சட்ட சபையின் எதிர்கட்சி தலைவரானார். அதன் பிறகு ஜானகியம்மாள் அரசியலிலிருந்து விலகினார். 


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தெடர் 1989 அண்டு 25 ஆம் தேதி தொடங்கிய போது பெரும் ரகளை ஏற்ப்பட்டு இனி ஆளும் கட்சி உறுப்பினராகத்தான் சட்ட சபைக்குள் நுழைவேன் எனக்கூறிவிட்டு அங்கிருந்து வெளியேரினார். 1990 டிசம்பர் மாத கடைசியில் தி.மு.க அரசை மத்தியில் இருந்த சந்திர சேகர் அரசு டிஸ்மிஸ் செய்தது. அந்த அரசும் கவிழ, 1991 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 

தமிழகத்தில் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஏற்ப்பட்டது. தேர்hலிலும் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றது. காங்கேயம்,பர்கூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா ஜுன் மாதம் 24 ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொருப்பேற்றார். 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தார். 1996 ல் நடைபெற்ற தேர்hலில் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் தி.ம.க வெற்றி பெற்று மந்திரி சபையை அமைத்தது. கருணாநிதி முதலமைச்சரானார்.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகள் :

அதன் பின்னர் ஜெயலலிதா மீதும் அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மீதும் பல வழக்குகள் தெடரப்பட்டது. இதனையடுத்து 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் சசிகலா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜமீனில் விடுவிக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதாவும் கையிது செய்யப்பட்டார். இதன் காரணமாக 28 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் 1997 ஜனவரி மதாம் 3 ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


ஜெயலலிதா மீது 7 வழக்குகள் போடப்பட்டது. இவற்றை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டன. அரசு நிறுவனமான டான்சிக்கு சொந்தமான நிலத்தை வாங்கியதாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 4 தெகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒருவர் 2 ற்கு மேற்ப்பட்ட தெகுதிகளில் போட்டியிடக்கூடாது என்பதால் 4 தெகுதிகளிலும் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 196 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.விற்கு மட்டும் 133 இடங்கள் கிடைத்தன். தனி மெஜாரிட்டியுடன் அ.தி.மு.க அமைச்சரவையை அமைத்தது.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். 


ஆனால் டான்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கெண்ட பெஞ்ச் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதலமைச்சராக ஒ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டான்சி வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்தார். அந்த அந்த அப்பீலை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஜெயலலித்தாவின் தன்டனையை ரத்து செய்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தீர்பு கூறியது. அத்துடன், நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்ததாக தொடப்பட்டிருந்த வழக்கிலும் டிசம்பர் 27 ஆம் தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனால் ஜெயலலிதா முதலமைச்சலாவதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டது.


ஜெயலலிதா உடனடியாக முதலமைச்கராக விரும்பாததால் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 41 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து அவரை முதலமைச்சராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.மார்ச் 2 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பாவியேற்றார். 















          

Comments

Popular posts from this blog

வங்காள உரைநடையின் தந்தை வில்லியம்கேரி

ஆதரவற்றோரின் அருமை தந்தை ஜார்ஜ் முல்லர்

பெற்ற மகளை நீ யார் என்று கேட்ட ஜீவா............ 17 வருடங்கள் குடும்பத்தை மறந்து நமக்காக உழைத்த ஜீவானந்தம்