மன்னார்குடி ஹரித்திரா நதி தெப்பக்குளம்
சகல தோஷங்களையும் போக்கும் காசிக்கு நிகரான மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம். கா விரியின் மகள், உபகாவிரி, மகா காவிரி, கண்ணன் திருவாய் கொப்பளித்த தீர்த்தம், மங்களங்கள் வழங்கும் தீர்த்தம் என பல சிறப்புகளை கொண்ட மன்னார்குடியில் அமைந்துள்ள ஹாரித்ரா நதி தெப்பக்குளத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்…… புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலும் ஒன்றாகும். திருப்பதிக்கு அடுத்ததாக வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது இங்கு மட்டும் தான் என்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று. ராஜகோபாலசுவாமி கோவில் ஆனி தெப்போற்சவம் நடைபெரும், ஹரித்ரா நதி தெப்பக்குளம் 23 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி தெப்ப திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 1642 ஆம் ஆண்டு பங்குனி மாதம் ராகவேந்திர சுவாமிகள் மன்னார்குடிக்கு வருகை தந்த போது இந்த ஹாரித்ரா நதி தெப்பக்குளத்தில் புனித நீராடியாதாக கூறப்படுகிறது. நான்கு புறமும் சுட்ட செங்கற்களை கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்ட கரைகளை உடை...